E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0342/ 2025 - கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 342/2025
      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global (Pvt.) Ltd. எனும் பெயரில் நிதி நிறுவனமொன்று 2014.02.05 காலப்பகுதியில் நடாத்தப்பட்டதென்பதையும்;
      (ii) மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அஹமட் ஷெரீம் முஹம்மது சிஹாப் (சிஹாப் ஷெரீம்) மற்றும் பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
      (iii) கடந்த டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவில் காணாமல் போயுள்ளனர் என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) மேலே (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (ii) இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      (iii) அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iv) இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பாக முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ​ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks