E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0315/ 2025 - கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 315/2024
      கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) இலங்கையில் —
      (i) 2024.12.31 அன்றுள்ளவாறாக மொத்தப் படுகடன் தொகை இலங்கை ரூபாவிலும் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலும் யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (ii) 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிற்குமான மொத்தப் படுகடன் தொகை யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (iii) 2024.12.31 அன்றுள்ளவாறாக மொத்தப் படுகடன் தொகையில் உள்நாட்டுப் படுகடன் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் என்பவற்றின் விபரங்கள் யாவையென்பதை வெவ்வேறாகவும்;
      (iv) பல்தரப்புக் கடன், இருதரப்புக் கடன், தேசிய அரசாங்கத்தின் பன்னாட்டுக் கடன் மற்றும் வணிகக் கடன் என வகைப்படுத்தப்பட்டு 2024.12.31 அன்று உள்ளவாறாக மொத்த வெளிநாட்டுப் படுகடன் விபரங்கள் யாவையென்பதையும்;
      (v) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுப் படுகடன் தொகை யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (vi) 2024.12.31 அன்றுள்ளவாறாக மொத்தப் பல்தரப்புக் கடன் தொகை யாதென்பதையும்;
      (vii) உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மற்றும் எலய்ட் ஐரிஷ் வங்கி ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல்தரப்புக் கடன் தொகை யாதென்பதை வெவ்வேறாகவும்;
      (viii) 2024.12.31 அன்றுள்ளவாறாக மொத்த இருதரப்புக் கடன் தொகை யாதென்பதையும்;
      (ix) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிற்குமான மொத்த இருதரப்புக் கடன் தொகை யாதென்பதை வெவ்வேறாகவும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks