01

E   |   සි   |  

 திகதி: 2023-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3333/2023: 2008-2013 வரையான இலங்கை வங்கியின் தலைவர்: நடத்தை

3333/2023
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை வங்கியின் அப்போதைய தலைவராக இருந்த திரு. காமினி விக்கிரமசிங்க தொடர்புபட்டிருந்த ஊழல் நடவடிக்கைகள் பற்றி அவர் அறிவாரா என்பதையும்;
(ii) 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வங்கி கடன் வட்டியினைத் தள்ளுபடி செய்திருந்தது என்பது மிஹின் லங்கா மற்றும் சிறிலங்கன் விமானசேவைகள் பற்றி விசாரித்த சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிக்கொணரப் பட்டதா என்பதையும்;
(iii) திரு. விக்கிரமசிங்க தலைவராக இருந்த மேற்குறிப்பிட்ட வங்கி, தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரத்தினைப் பொருத்துவதற்கும் தகவல் தொழினுட்பம் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கும் இன்போமெடிக்ஸ் குழுமத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதா என்பதையும்;
(iv) மேற்படி ஒப்பந்தங்களை வழங்கிய வேளையில் திரு. விக்கிரமசிங்க இன்போமெடிக்ஸ் குழுமத்தில் பகுதி உரித்தாண்மையினைக் கொண்டிருந்தாரா என்பதையும்;
(v) இன்போமெடிக்ஸ் குழுமத்தின் உரிமையாளராக இருக்கையில் இலங்கை வங்கியின் தலைவர் என்ற ரீதியில் கடமைகளை நிறைவேற்றுகையில் நலன் முரண்பாடு காணப்பட்டதா என்பதையும்;
(vi) திரு. விக்கிரமசிங்கவின் மேற்குறிப்பிடப்பட்ட ஒப்பந்தங்களும் ஏனைய ஊழல்களும் விசாரிக்கப்படுகின்றனவா என்பதையும்;
(vii) விசாரணையில் இருந்து கண்டறியப்பட்டவற்றினையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-22

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks