01

E   |   සි   |  

 திகதி: 2023-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2968/2023: Elected member details to SL Cricket board

2968/2023

கௌரவ ஹேஷா விதானகே,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல்கள் நடைபெற்ற திகதிகள் யாவையென்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்புடைய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், முகவரி மற்றும் பதவிப் பெயர் என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி நபர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள், எரிபொருள் மற்றும் பிற வசதிகளுக்காக உறப்பட்ட செலவுகள் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி நபர்களுக்காக உறப்பட்ட அத்தகைய செலவினங்களுடன் ஒப்பிடுகையில், கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக அவர்களிடமிருந்து கிடைத்துள்ள பங்களிப்பு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks