01

E   |   සි   |  

 திகதி: 2023-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1685/2023: Project details of Mango tree plantation in Mannar, Vavuniya and Mullaithivu

1685/2023

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு TomEJC வகையான மாங்கன்றுகள் மற்றும் சூரிய சக்தி நீர் பம்பிகளின் தேவை உள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) விவசாயிகளின் உற்பத்தி இயலளவை மேம்படுத்துவதன் பொருட்டு —

(i) ஒரு மாவட்டத்திலிருந்து தலா 300 விவசாயக் குடும்பங்கள் வீதம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 900 விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 100 மாங்கன்றுகள் வீதம் 90,000 மாங்கன்றுகளை வழங்குவதற்கும்;

(ii) மேற்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூபா 330,000 பெறுமதியான சூரிய சக்தி நீர் பம்பிகளை ஒரு மாவட்டத்திற்கு 1500 என்ற அடிப்படையில் 70%மான மானியத்துடனும் 30%மான பயனாளிகளின் பங்களிப்புடனும் வழங்குவதற்கும்;

நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-24

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks