01

E   |   සි   |  

 திகதி: 2023-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1683/2023: Necessity for a office of Agrarian Department in Venkalasettikulam, Vavuniya

1683/2023

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்திலுள்ள 20 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம் என்பதையும்;

(ii) வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசமானது மிகப் பெரிய பிரதேசமாக காணப்படுவதால் அதற்குரிய கமநல சேவைகள் நிலையத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது மேற்படி விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்;

(iii) வெங்கலச் செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள சில கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தமது விவசாய சேவைகளைப் பெறுவதற்காக சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கமநல சேவைகள் நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) வெங்கலச் செட்டிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு விவசாய சேவைகளைப் பெறுவதற்காக புதிய கமநல சேவைகள் நிலையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-10

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks