01

E   |   සි   |  

 திகதி: 2023-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1679/2023: Appointment of separate Electrical Engineer for Mannar and Mullaitivu Districts

1679/2023
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கென மாவட்ட மின் பொறியியலாளர்கள் நியமிக்கப்படாமையினால் மின் பாவனையாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி மாவட்டங்களுக்கென மின் பொறியியலாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) மேற்படி பொறியியலாளர்களுக்குத் தேவையான பௌதீக வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அப்போதைய பிரமத அமைச்சர் வாக்குறுதியளித்த போதிலும் மன்னார் மாவட்டத்தில் வதியும் எந்தவொரு நபருக்கும் இதுவரையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேற்படி மின் உற்பத்தி நிலையத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks