01

E   |   සි   |  

 திகதி: 2023-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1465/2023: Lands under Coconut Cultivation Board

1465/2023

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான தென்னங் காணிகளின் அளவு ஒவ்வொரு மாவட்டத்தின் படி வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) 2019 ஆம் ஆண்டு அத்தென்னங் காணிகளிலிருந்து பெறப்பட்ட தேங்காய் அறுவடை யாதென்பதையும்;

(iii) புதிதாக தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளின் அளவு யாதென்பதையும்;

(iv) அக்காணிகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(v) தெங்கு பயிர்ச்செய்கை சபையின் வருடாந்த வருமானம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-22

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks