01

E   |   සි   |  

 திகதி: 2011-12-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1814/2011: Building Nagara and Kadawath Pradeshiya Saba - Trincomalee

1814/ ’11

 

கெளரவ அருந்திக்க பெர்னாந்து,—- பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      திருகோணமலை மாவட்டத்தில், பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் 2011.07.05ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதென்பதையும்;

(ii) அப்போது, மேற்படி பிரதேச சபையின் புதிய ஆளும்தரப்பினர் சத்தியப்பிரமாணம் செய்திருக்கவிலையென்பதால் விசேட ஆணையாளராக அதிகாரமளிக்கப்பட்டிருந்த பிரதேச செயலாளரின் பொறுப்பின் கீழ் அந்த அங்குரார்ப்பணம் நடைபெற்றது என்பதையும்;

(iii) புதிய ஆளும்தரப்பினர் சத்தியப்பிரமாணம் செய்திராத ஒரு சந்தர்ப்பத்தில் மேற்படி அங்குரார்ப்பண வைபவத்தை நடத்தியமையானது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அதனை ஒத்திவைக்குமாறு வழங்கிய அறிவுறுத்தல்கள் கவனத்தில் கொள்ளப்படாமையாகும் என்பதையும்

அவர் அறிவரா?

(ஆ) (i) அமைச்சின் செயலாளர் ஒருவரினால் எவறேனுமொரு பிரதேச செயலாளருக்கு விடயப்பரப்பிற்கு அமைவாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதற்கு அதிகாரம் உள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், மேற்கூறியவாறு செயற்பட்டுள்ள திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-12-20

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks