01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1391/2021: Details of Licensed collectors of Toddy

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)        கள்ளு சேகரிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறையானது. மதுவரி ஆணையாளர் நாயகம் அவர்களின் கட்டளைக்கு உட்பட்டு அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான மதுவரி அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் அந்தந்தத் தகவல்களைப் பெற்று அதற்கான பதில்களை    வழங்குவதற்கு இரு மாத காலம் தேவைப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

(ii)  மேலே (அ) (i) இலுள்ள பதில் இதற்கு ஏற்புடையது.

  (iii)  மேலே (அ) (i) இலுள்ள பதில் இதற்கு ஏற்புடையது.

(iv)  மேலே (அ) (i) இலுள்ள பதில் இதற்கு ஏற்புடையது.

(ஆ) சேகரிக்கப்படும் கள்ளை கள் சேகரிப்போர் வசம் அல்லது கள் சேகரிக்கும் மத்திய நிலையத்தில் வைத்திருக்கக்கூடிய காலம் பி.ப 6.00 மணி வரையிலாகும்.

(இ) (i) ஆம்.

(ii) மரம் சீவும் உரிம முறையின்றி கள்ளின் உப உற்பத்தி அடங்கலான கள் உற்பத்திச் செயன்முறையை உரிய நிலையங்களிலும் மற்றும் அவற்றின் செயன்முறைகளை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கும் சாத்தியமில்லை.

(iii) கள்ளிற்கு வெளிப்பொருட்களைக் கலத்தல் பற்றி, கண்டுபிடிப்பை மேற்கொள்வதற்கும் தொடர்ச்சியான பரிசோதனை மற்றும் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கும் கள் இருப்பிலிருந்து மாதிரியைப் பெற்று அவற்றின் பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கும், அத்தகைய செயற்பாடுகளில்  உரிமமற்றோர் ஈடுபடுதலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும், உரிமதாரர்களிற்கு எதிராகத் தொழில்நுட்பக் குற்ற அறிக்கைகள் சமர்ப்பித்துச் சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் மதுவரித் திணைக்களத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

(iv) புளித்த கள்ளிற்கு, பல்வேறு கள் வகைகளிற்கான உள்நாட்டு தரநிலைகளை அறிமுகப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அதுவரை கள்ளு  இருப்பிலிருந்து பெறப்படும் மாதிரியை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத் திற்கு அனுப்பி அதில் அடங்கியுள்ள அமில சதவீதம் மற்றும் அக்கள்ளு இருப்பின் உள்ளடக்கம், அதன் அற்ககோல் சதவீதம் போன்ற விடயங்கள் சம்பந்தமான பகுப்பாய்வு அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

(ஈ) ஏற்புடையதன்று.

 

பதில் தேதி

2021-05-20

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks