01

E   |   සි   |  

 திகதி: 2020-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0108/2020: திரிபோஷ உற்பத்தியும் விநியோகமும்: விபரம்

108/2020

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் திரிபோஷ துணை போசணை போதியளவிலும் ஒழுங்குமுறையாகவும் கிடைப்பதில்லை என்பதையும்;

(ii) சிறுவர் மந்தபோசணை கணிசமானளவு காணப்படுவதற்கு இவ்விடயமும் காரணமாக அமைகின்றதென்பதையும்;

(iii) இதன் காரணமாக பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) தற்போது, ஆண்டுக்கான திரிபோஷ உற்பத்திக் கொள்ளளவு எத்தனை கிலோகிராம் என்பதையும்;

(ii) ஓராண்டின் நுகர்வுக்காக எத்தனை கிலோகிராம் திரிபோஷ தேவைப்படுகின்றதென கணிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்தளவு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) (i) நாட்டின் தேவைக்கு போதுமானளவு திரிபோஷ உற்பத்திசெய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எப்படியென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2020-11-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-06

பதில் அளித்தார்

கௌரவ பியல் நிசாந்த த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks