01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1029/2019: Proposals 240- Budget 2016

1029/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு இல. 240 மூலம் கட்டட மற்றும் நிர்மாணத்துறையில் ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 500 மில்லியன் எவ்வாறு உபயோகிக்கப்பட்டது என்பதையும்;

(ii) மேற்கூறிய வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய மூன்று மாதங்களுக்கு இளைஞர்கள் 7500 போ் வீதம் வருடமொன்றுக்கு 30,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) முப்பதாயிரம் வரையிலான பெருமளவு இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் யாவை என்பதையும்; அந்த ஒவ்வொரு நிறுவனத்துக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks