01

E   |   සි   |  

 திகதி: 2019-08-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0967/2019: திரு. டபிள்யூ. எச். எம் கருணாதிலக்க பண்டா: அனுசரணை நிதிய உரிமை

967/ '19

கௌரவ பிமல் ரத்னாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொலிஸ் திணைக்களத்தினால் "அனுசரணை நிதியம்" எனும் பெயரில் நிதியமொன்று பேணப்பட்டதென்பதையும்;

(ii) மேற்படி நிதியத்துக்கு சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகை அறவிடப்பட்டதென்பதையும்;

(iii) கண்டி, அம்பிடிய, கல்தென்ன வீதி, 08 ஆம் இலக்க விலாசத்தில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் திரு டபி. எச். எம் கருணாதிலக்க பண்டா 07 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெறுகையில் இந் நிதியத்திலுள்ள தமக்குரிய தொகையை கோரி விண்ணப்பித்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ள போதிலும், இது வரை அத்தொகை செலுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) திரு கருணாதிலக்க பண்டாவிடமிருந்து அறவிடப்பட்ட ரூ. 12,328/- தொகையினை இவருக்கு மீள செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இத் தொகைக்கு வட்டித் தொகை செலுத்தப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எப்பொழுதுசெலுத்தப்படும் என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks