பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
963/ '19
கௌரவ முஹம்மது நசீர்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கராப்பிட்டிய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமீபத்தில் அரசாங்கத்திற்கு சுவீகரிக்கப்பட்ட ஆரச்சிகும்புர எனப்படும் காணியின் பிரதான பங்குதாரராகக் கருதப்படும் காலி, கராப்பிட்டிய, அனகாரிக தர்மபால மாவத்தை, இலக்கம் 87ஏ என்ற முகவரியில் வசிக்கும் திரு ஏ.சீ.எம் ஹசன் என்பவருக்கு குறித்த காணியின் பெறுமதியின்படி இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா;
(ii) இவருக்கு தனது வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மேற்படி வியாபாரக் காணித் துண்டுக்கு போதிய இழப்பீடு வழங்கத் தவறியுள்ள நிலையில், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை அதற்குப் பதிலாக கோரியுள்ளபோதும் இதுவரை அதற்கு பதிலளிக்கப்படாதது ஏன்;
(iii) இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து திரு ஹசனுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-26
கேட்டவர்
கௌரவ முஹம்மது நசீர், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-07-26
பதில் அளித்தார்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks