01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0939/2019: Importation of rice 2015 to 2018

939/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணர்வதன,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை,

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ள அரிசியின் அளவு எத்தனை மெற்றிக் தொன் என்பதையும்;

(ii) அரிசி இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி எவ்வளவென்பதையும்;

(iii) அரிசி இறக்குமதிக்காக அறவிடப்பட்ட விசேட வர்த்தக பண்டங்கள் வரி எவ்வாறு திருத்தப்பட்டதென்பதையும்;

(iv) அரசாங்க நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு மற்றும் மேற்படி நிறுவனங்கள் அரிசி விற்பனையின் மூலமாக ஈட்டிக்கொண்டுள்ள இலாபம் அல்லது நட்டம் வருட வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks