01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0882/2019: Tanks in Anuradhapura district affected by invasive plant species

882/ '19

கெளரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் சிறு குளங்கள், ஆகாயத் தாமரை "ஜப்பான் ஜக்கோனியா" போன்ற நீர்த்தாவரங்களின் ஆக்கிரமிப்பால் துரிதமாக தூர்ந்து வருவதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி நீர்த்தாவரங்களின் ஆக்கிரமிப்பு "கட்டியாவ குளம்" போன்ற நடுத்தர அளவிலான குளங்களுக்கும் பரந்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) மேற்படி நீர்த்தாவரங்களின் ஆக்கிரமிப்பு எதிர்காலத்தில் நெற் செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அது தேசிய ரீதியான ஒரு பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) மேற்படி நீர்த்தாவரங்களின் ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks