01

E   |   සි   |  

 திகதி: 2019-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0553/2019: Preschools in Killinochchi District conducted by the Civil Defense Force

553/ '19

கௌரவ சி. சிறீதரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) சிவில் பாதுகாப்புப் படையணித் திணைக்களத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அத்திணைக்களத்தினால் சம்பளம் வழங்கப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புப் படையணியினால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை, சம்பளம் வழங்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரொருவரின் சம்பளம் என்பன தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

(ii) இம் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் சீருடைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடப்படுகின்றது என்பதையும்;

(iii) சீருடைகளுக்காக ஒரு மாணவனிடமிருந்து அறவிடப்படும் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) அக்கட்டணம் பெற்றோர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

(v) இம்மாணவர்களின் சீருடைகளில் சிவில் பாதுகாப்புப் படையணியின் இலச்சினை அச்சிடப்பட்டிருப்பதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) இவ்வாறு பாதுகாப்புப் படையினரால் முன்பள்ளி நடாத்தப்படுவதால் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் ஐக்கியம் ஆகிய விடயங்களில் செல்வாக்குச் செலுத்தமாட்டாதா என்பதையும்;

(ii) வட மாகாண சபைக்குரித்தான இம்முன்பள்ளிகள் சிவில் பாதுகாப்புப் படையணியினால் நடாத்தப்படுவது சட்டபூர்வமானதாகுமா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-23

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks