01

E   |   සි   |  

 திகதி: 2019-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0464/2019: குடிநீர்ப் பிரச்சினை: புத்தளம் மாவட்டம்

464/ '19

கெளரவ அசோக்க பிரியந்த,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) அக்குடும்பங்கள் வதியும் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக "புத்தளத்திற்கு உதயம்" வேலைத்திட்டத்தின் கீழ் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் இன்றளவில் புத்தளம் மாவட்டத்தில் குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை கிராம அலுவலர் பிரிவு வாரியாக யாது என்பதையும்;

(v) புத்தளம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-25

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-25

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks