01

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0382/2019: Appointment of Mr Merril Gunathilake as Chief Commissioner National Scouts Association

382/ '18

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை சாரணியர் இயக்கத்தின் தற்போதைய தலைமை ஆணையாளர் திரு. மெரில் குணதிலகவின் நியமனத்தின் மூலம் 1957 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சாரணியர் இயக்க சட்டத்தின் 2 ஆம் பகுதியின் 8 ஆம் பிரிவு மீறப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) புதிய நியமனம் முன்னாள் தலைமை ஆணையாளர் திரு. நிமல் த சில்வாவின் நட்புறவு அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) புதிய தலைமை ஆணையாளர் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாரணியர் தலைமையகத்தில் ஆணையாளராக இருந்தபோது உரியவாறு பணிகளை நிறைவேற்றாமையினால் பணியிலிருந்து அகன்று செல்லுமாறு இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு எழுத்தில் அறிவித்துள்ளதென்பதையும்;

(iv) இது சம்பந்தமாக நிறைவேற்றுக் குழுவினாலும் இயக்கத்தின் தலைவரினாலும் பல சந்தர்ப்பங்களில் சனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்நியமனத்தை முன்மாதிரியாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் பொருத்தமற்ற ஆட்கள் இப்பதவியில் நியமனம் பெறுவதற்கு வாய்ப்புள்ளதென்பதையும்;

(ii) உலக சாரணியர் கொள்கைக்கு அமைவாக சட்டம் நடைமுறைப்படுத்தப் படாவிடின் அங்கத்துவத்தை இழக்க நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) மேற்படி அ (1) இன் பிரகாரம் இந்நியமனம் செல்லுபடியாகுமா என்பதையும்;

(ii) இது சம்பந்தமாக புலன்விசாரணையொன்று நடாத்தப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;

(iv) இன்றேல், எதிர்வரும் காலத்தில் புலனாய்வு நடாத்தப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks