01

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0069/2019: சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு: விபரம்

69/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப யாது;

(ii) மேற்படி அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விலைகள் யாவை;

(iii) மேற்படி அரிசி சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள முறை யாது;

(iv) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் வருடாந்தம் சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுகள் மற்றும் விலைகள் வெவ்வேறாக யாவை;

(v) 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் லக் சதொசவினால் தனியார் துறையினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது;

(vi) மேற்படி ஒரு கிலோ அரிசிக்காக செலுத்தப்பட்ட பணத்தொகை யாது;

(vii) மேற்படி அரிசியைக் கொள்வனவு செய்த வர்த்தக நிறுவனங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-21

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks