01

E   |   සි   |  

 திகதி: 2018-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1127/2018: Granting of Scholarships for Grade 5 students

1127/ '18

கௌரவ நிஹால் கலப்பத்தி,— கல்வி​ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டில்​ ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் ​உதவுதொகை வழங்கப்படுகின்றதா;

(ii) ஒரு மாணவருக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மாணவர் ​உதவுதொகை எவ்வளவு;

(iii) மாணவர் ​உதவுதொகையை வழங்குவதற்காக மாதமொன்றுக்கு செலவாகும் மொத்தப் பணத் தொகை எவ்வளவு;

(iv) 2016 ஆம் ஆண்டுக்குரிய மாணவர் ​உதவுதொகை வழங்கப்பட்டுள்ளதா;

(v) 2017 ஆம் ஆண்டில் எந்த மாதம் வரை மாணவர் ​உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மாணவர் ​உதவுதொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படுகின்றனவா;

(ii) ஆமெனில், அத்தகைமைகள் யாவை;

(iii) அத்தகைமைகளுக்குரிய அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டுள்ள வருடம் யாது;

(iv) மேலதிக தகைமைகளைக் கருத்திற்கொள்ளாது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் ​உதவுதொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(v) ஆமெனில், அத்திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks