01

E   |   සි   |  

 திகதி: 2018-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0994/2018: Palawatta Sugar Factory

994/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெல்வத்தை சீனித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாது;

(ii) மேற்படி தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் எக்கரளவு யாது;

(iii) மேற்படி தொழிற்சாலைக்கான கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் ஏக்கரளவு யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) கடந்த 5 வருட காலப்பகுதிக்குள்,

(i) கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணிகளின் அளவு;

(ii) பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட மொத்த காணிகளிலிருந்து பெற்றுக்கொண்ட மொத்த கரும்பு தொன்களின் அளவு ;

(iii) பிழியப்பட்ட கரும்பு தொன்களின் அளவு;

(iv) உற்பத்தி செய்யப்பட்ட மொத்த சீனியின் அளவு;

(v) சீனி விற்பனையின் மூலம் கிடைத்த இலாபம்;

ஒவ்வொரு வருடத்திற்கிணங்கவும் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks