01

E   |   සි   |  

 திகதி: 2018-10-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0597/2018: Lands belonging to the CGR turned over to public and private sectors

597/ '18

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) இலங்கை புகையிரதத் திணைக்களத்துக்கு சட்ட ரீதியாக உரித்தாகியுள்ள முழுக் காணிகளின் அளவு ஒவ்வொரு மாவட்டத்துக்கமைய எவ்வளவென்பதையும்;

(ii) 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது வரை மேற்படி காணிகளில் அரச துறைக்கு அல்லது தனியார் துறைக்கு விற்கப்பட்டுள்ள காணி எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி காணிகளை கொள்வனவு செய்தவர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) புகையிரதத் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளில் நீண்ட கால அல்லது குறுகிய கால குத்தகை அடிப்படையில் வேறு தரப்புகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;

(v) ஒவ்வொரு மாவட்டத்துக்கமைய மேற்படி குத்தகை/வாடகை குடியிருப்பாளர் களின் பெயர்களையும் அவர்களால் செலுத்துவதற்கு இணங்கியுள்ள வாடகை விபரங்களையும் கொண்ட ஆவணமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-26

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks