01

E   |   සි   |  

 திகதி: 2018-10-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0545/2018: Waiting List for surgeries in main Government Hospitals

545/ '18

கௌரவ வாசுவே நாணாயக்கார,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(ii) மேற்படி நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 3 வருட காலப்பகுதியில் எந்த அளவு அதிகரித்துள்ளது அல்லது குறைவடைந்துள்ளது;

(iii) 2017.11.30 ஆம் திகதிய சுகாதாரம் மற்றும் மானிட நலனோம்புகை, சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கையின் விதப்புரைகள் குறித்து அறிவாரா;

(iv) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் காலவரையறை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 'லிடில் ஹாட்' கருத்திட்டத்துக்குத் தேவையாகவுள்ள நிதி ஏற்பாடுகள் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks