01

E   |   සි   |  

 திகதி: 2018-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0543/2018: Calling for Tenders for the construction of industries in Hambantota Port premises

543/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010, 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அம்பாந்தோட்டை துறைமுக வளவில் கைத்தொழில்களுக்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனின், அத்தகைய சந்தர்ப்பங்களில் ஹெக்டயர் ஒன்றுக்கான அரசாங்கத்தின் வருடாந்த மதிப்பீட்டு குத்தகைத் தொகை யாது என்பதையும்;

(iii) 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டில் அத்தொகையானது ஹெக்டயர் ஒன்றுக்கென அமெரிக்க டொலர் 50,000 ஆகவும் மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஹெக்டயர் ஒன்றுக்கென அமெரிக்க டொலர் 56,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததா என்பதையும்;

(iv) தற்போது அந்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இந்த காணிகளை சீனக் கம்பனிக்கு வழங்கியபோது ஹெக்டயர் ஒன்றுக்கென மதிப்பீடு செய்யப்பட்ட விலை யாது என்பதையும்;

(ii) பல ஆண்டுகளாக இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) இணைந்து பணியாற்றி சரியான கேள்விப்பத்திர நடைமுறையின் கீழ் அங்கீகாரம் பெற்ற முதலீட்டுக் கம்பனிகளுக்கு பொருத்தமான வேறு இடமொன்று வழங்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks