01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0532/2018: Relief for the Homeless in cities

2009/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வசிப்பதற்கு வீடின்றி ஆங்காங்கே சென்று, வெளி விறாந்தைகளில் இரவினைக் கழிக்கும் ஏழை மக்கள் காற்று மற்றும் மழையுடன் கூடிய நாட்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையை எதிர்நோக்க நேரிடுவதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) கொழும்பு நகரத்திலும் ஏனைய பிரதான நகரங்களிலும் இத்தகைய கதியற்ற நிலையிலுள்ள ஏழை மக்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக தற்காலிக தங்குமிடங்கள் எனப்படும் "மடங்களை" நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks