01

E   |   සි   |  

ஜனவரி முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025, டிசம்பர் 31ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஜனவரி 06 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 3.30 (i) கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.19ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 6ஆம் இலக்க விடயம்)
(ii) கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.19ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 7ஆம் இலக்க விடயம்)
பி.ப. 3.30 - பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.28 ஆம் திகதிய 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இப்பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
பி.ப. 5.30 மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றினை நியமிப்பதற்கான பிரேரணை
(2025.12.05 ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தலின் கீழ் 1 ஆம் இலக்க விடயம்)
 
2026 ஜனவரி 07 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.12.05ஆம் திகதி வெளியிடப்பட்ட 3 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 4ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.28 ஆம் திகதிய 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்க. 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 ஐ இடைநிறுத்தியதன் பின்னர் இப்பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஜனவரி 08 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.19ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2026 ஜனவரி 09 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 3.00

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.19ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 8ஆம் இலக்க விடயம்)

பி.ப. 3.00 - பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.12.19ஆம் திகதி வெளியிடப்பட்ட 3(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.01.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்டுள்ள 3ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks