பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : ஒழுங்குப் பத்திரத்தில் தனியார் உறுப்பினர் பிரேரணைகளை நிரலிடுவது தொடர்பாக
2 : இலங்கை பாராளுமன்றத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 09 ஆம் திகதிய 2457/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான தீர்மானம்
(2025 ஒற்றோபர் 09 ஆம் திகதிய 2457/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
கொழும்பு - மன்னார் ரயில் சேவையின் சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கையில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பாக 2025.09.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும்; பணக் கடன் வழங்கு தொழிலையும் நுண்நிதித்தொழிலையும் ஒழுங்குபடுத்துவதற்கும்; பணக் கடன் வழங்கு தொழிலினதும் நுண்நிதித்தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும்; 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“'ஹிமிகம' திட்டத்தில் உள்ள சிக்கல்களை செயல்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 27ஆந் திகதி வியாழக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks