E   |   සි   |  

2020 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : கொவிட் - 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றல் தொடர்பானது
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதி
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XVII ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016, 20172018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் சமூக பாதுகாப்புப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x)    2019 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்

(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் இலங்கை கட்புல மற்றும் அரங்கேற்றற்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக  2020 யூன் 13 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக ஓய்வுபெற்ற பேராசிரியர் வீரக்கோன் முதியன்சலாகே அபயரத்ன பண்டார அவர்களை   நியமித்தல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 யூன் 29 ஆம் திகதிய 2182/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக  2020 ஏப்ரல் 01 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக கலாநிதி நவரட்னகே சுனில் ஜயந்த நவரட்ன அவர்களை நியமித்தல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 யூன் 29 ஆம் திகதிய 2182/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக  2020 யூலை 01 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் எஸ்.எம்.ஏ நாணயக்கார அவர்களை நியமித்தல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 யூலை 01 ஆம் திகதிய 2182/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு உயர்கல்விப் பிரிவு தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி லொக்குகே        -    நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ எஸ்.எம். சந்திரசேன        -    மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா             -    மூன்று மனுக்கள்         
(iv)    கௌரவ அமரகீர்த்தி அதுகோரள                    
(v)    கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

இலங்கை அரசாங்கத்திற்கான கடன் நிலை மற்றும் மூடியின் கடன் மதிப்பீடு

மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நிதி (திருத்தச்) சட்டமூலம்
(ii)    ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வயம்ப பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் மருத்துவ பயிற்சிக்கான பேராசிரியர் பிரிவு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சமன்பிரிய ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks