01

E   |   සි   |  

 திகதி: 2018-07-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0396/2018: Interview for Prison Officials 2016

1743/ '17

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சிறைச்சாலை காவலாளி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், 2016.10.19 ஆம் திகதி முதல் 2016.10.27 ஆம் திகதி வரை நடைபெற்ற நேர்முகப் பரீட்சை மற்றும் 2016.11.03 ஆம் திகதி முதல் 2016.11.12 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதென்பதையும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையில் 2016.11.24 ஆம் திகதி கையொப்பமிடுமாறு தகைமை பெற்றவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டு மீண்டும் அது ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

(iv) அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நியமனங்கள் இற்றைவரை வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நியமனம் வழங்குவதில் சிக்கல்மிகு நிலை உள்ளபோது நியமனம் பெறுபவர் களை அசௌகரியப்படுத்தும் வகையில் இவர்களுக்கு உடன்படிக்கைக் கடிதம் வழங்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) தகைமைகளை பூர்த்திசெய்துள்ள நியமனப்பெறுனர்களுக்கு நியமனங்களை வழங்காததன் மூலம் இவர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆமெனில், நியமனங்களை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks