01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0229/2018: Resettlement in Vediwaiththaka village in Vavuniya North

2117/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யுத்தத்தின் காரணமாக 1985 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய வெடிவைத்தகல் கிராம மக்களுக்கு, இக்கிராமத்தில் மீண்டும் குடியேறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதெனினும், இதற்கான எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமையின் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு பிரதேசங்களில், பல இன்னல்களுக்கு மத்தியில் இவர்கள் வசிக்கின்றார்கள் என்பதையும்;

(ii) மேற்படி கிராமத்தில் வீடுகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்மையும், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்றமையாலும் மக்கள் இங்கு மீள்குடியேறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட பாடசாலையும் பாழடைந்துள்ளதென்பதையும்;

(iv) மேற்படி கிராமத்தை அண்டியதாக அமைந்துள்ள கோவில் புளியங்குளம் கிராமத்திலும் அடிப்படை வசதிகளின்மையால் தற்சமயம் 09 குடும்பங்கள் மாத்திரமே வசிப்பதென்பதையும்; இங்குள்ள பாடசாலையும் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கிராமங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்து மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks