01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0227/2018: Distribution of Samurdhi Allowances Mulaitivu district

227/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சமூக வலுவூட்டல்கள் அமைச்சு,—

(அ) (i) முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் மிகவும் வறிய மாவட்டம் என்பதையும்;

(ii) இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 23,057 நலன்பெறுனர்கள் சமுர்த்தி மானியம் பெறுவதற்கான தகைமை பெறுவதாக இனங்காணப்பட்டிருந்த போதிலும், இற்றைவரை 11,111 நலன்பெறுனர்களுக்கு மாத்திரமே மானியம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) 2013 ஆம் ஆண்டில் சமுர்த்தி நலன்பெறுனர்களை தெரிவுசெய்கையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகளிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த 13 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்த்துவதற்காக அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மேற்படி 23 கிராம அலுவலர் பிரிவுகளிலுமிருந்து எந்தவொரு நலன்பெறுனரும் தெரிவுசெய்யப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த நிலைமையில் சமுர்த்தி மானியங்களை பெறுவதற்காக தற்போது இனங்காணப்பட்டுள்ள நலன்பெறுனர்களில் எஞ்சியுள்ள 11,946 நலன் பெறுனர்களுக்கு சமுர்த்தி மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா;

(ii) மேலே குறிப்பிட்ட கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளின் கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள சமுர்த்தி நலன்பெறுனர்களின் நிலைமை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-07

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks