01

E   |   සි   |  

 திகதி: 2018-04-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2412/2018: Gajamuthu Piyasa Housing scheme

2412/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியை நோக்கியதாக "ரிதீபெந்தி எல்ல" என்ற பெயரில் காணியொன்று உள்ளதென்பதையும்;

(ii) அந்தக் காணியில் "கஜமுத்து பியச" என்ற பெயரில் வீடமைப்புத் திட்டமொன்றை நிர்மாணிப்பதற்காக தற்போது பணம் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) அவ்வாறான வீடமைப்புத் திட்டமொன்றை அந்த இடத்தில் நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினதும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினதும் அங்கீகாரம் பெறப்பட்டிருப்பின் அது தொடர்பான விபரங்கள் யாவை;

(ii) இந்தக் காணியில் வீடமைப்புத் திட்டமொன்றை நிர்மாணிப்பதற்காக பணம் சேகரிக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் சட்ட விரோத செயல் இடம் பெற்றிருப்பின், அது தொடர்பாக அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-06

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks