01

E   |   සි   |  

 திகதி: 2017-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

2168/2017: Stone Crusher to be located at Nawakkulama village Madawachchiya

2168/ '17

கெளரவ ஷெஹான் சேமசிங்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) அநுராதபுரம் மாவட்டத்தின், மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 43 பிரபோதாகம கிராம அலுவலர் பிரிவின் நாவற்குளம் கிராமத்தில் கல் ஆலையொன்றை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) ஆமெனில்,

(i) கல் ஆலையின் உரிமப்பத்திர இலக்கம் மற்றும் அது வழங்கப்பட்டுள்ள திகதி;

(ii) விண்ணப்பித்த ஆளின் பெயர் மற்றும் விண்ணப்பித்த திகதி;

(iii) மேற்படி உரிமப்பத்திரத்தை வழங்குவதற்காக சுற்றாடல் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி கல் ஆலையை ஆரம்பிக்க முன்னர் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) மேற்படி ஆலை தொடர்பில் மக்களின் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதை அறிவாரா;

(iii) இந்த ஆலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-30

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks