01

E   |   සි   |  

 திகதி: 2017-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2125/2017: Building facilities for Open University in Mannar which was opened in 2016

2125/ '17

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையமானது (Study Center) இற்றைவரை காலமும் தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வருகின்றதென்பதையும்;

(ii) நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக காணி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இற்றைவரை நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;

(iii) 2017.06.20 ஆம் திகதி நிர்மாணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஏற்பாடுகளை ஒதுக்குமாறு என்னால் எழுத்து மூலமான கோரிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பதையும்;

(iv) வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதேச நிலையங்களுக்காக / கற்கை நிலையங்களுக்காக நிரந்தரக் கட்டிடங்கள் உள்ளபோதிலும் மன்னார் மாவட்டத்திற்கு மட்டும் நிரந்தரக் கட்டிடமொன்று இல்லையென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடுகளின்போது தற்போது மன்னார் மாவட்டத்தில் தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வருகின்ற திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தின் பொருட்டு நிரந்தரக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக தங்கள் அமைச்சின் மூலம் நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks