01

E   |   සි   |  

 திகதி: 2017-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

2119/2017: Air Force camps Jaffna

2119/ '17

கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) 2015.01.09 ஆம் திகதியளவில் மற்றும் 2017.06.30 ஆந் திகதியளவில்,

(i) யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை விமானப் படை முகாம்களின் எண்ணிக்கை;

(ii) அம் முகாம்களுக்கு இணைக்கப்பட்டு பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் மொத்த எண்ணிக்கை;

(iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்திருந்த பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் எண்ணிக்கை;

வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2015.01.09 ஆந் திகதியிலிருந்து 2017.06.30 ஆந் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து,

(i) நீக்கப்பட்ட விமானப் படை முகாம்களின் எண்ணிக்கை;

(ii) விமானப் படை முகாம்களிலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் எண்ணிக்கை;

எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விமானப் படை முகாம்கள், அவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களை வாபஸ் பெற்றமை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதை அவர் இச் சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-30

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks