01

E   |   සි   |  

 திகதி: 2018-04-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

2115/2018: Housing schemes for Tsunami victims and displaced people

2115/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) கிளிநொச்சி மாவட்டத்தின், கண்டாமலை பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய கல்லாறு கிராமத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 143 நிரந்தர வீடுகளும், மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கென பல்வேறு வீடமைப்புத் திட்டங்களின் கீழ் கிடைத்த 100 வீடுகளும் என்றவாறு 243 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) மேற்படி 243 வீடுகளில் இன்றளவில் சுமார் 186 வீடுகளில் மாத்திரம் மக்கள் குடியமர்ந்துள்ளதோடு, எஞ்சிய 57 வீடுகளில் யாரும் குடியேறாத நிலையில் அவை வெற்றிடமாக உள்ளனவென்பதையும்;

(iii) குடிநீர், முறையான போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் இன்றளவில் குடியேறியுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

(iii) இன்றளவில் வெற்றிடமாக உள்ள வீடுகளை, வீடு இல்லாத குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks