01

E   |   සි   |  

 திகதி: 2017-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

1953/2017: Medical faculty for University of Sabaragamuwa

1953/ '17

கௌரவ வாசுதேச நாணாயக்கார,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2007 ஆம் ஆண்டில் சப்ரகமுவ பல்கலைகலைக் கழகத்தில் மருத்துவ பீடமொன்றை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு இரத்தினபுரி பொது வைத்தியசாலையை தொடர்புபடுத்திக் கொண்டு 3 பட்டப்படிப்பு பாடநெறிகளின் கீழ் 125 மாணவர்களை அனுமதிப்பதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) இதற்கேற்ப, மருத்துவ பட்டத்திற்காக 75 மாணவர்களும், தாதி பட்டத்திற்காக 25 மாணவர்களும், துணை மருத்துவ பட்டத்திற்கு 25 மாணவர்களும் என்றவாறு அனுமதிக்கப்பட உத்தேசமாயிருந்ததென்பதை அறிவாரா என்பதையும்;

(iii) இதற்கு இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அருகில் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக 21 ஏக்கர் காணியொன்றும் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(iv) மேற்படி திட்டம் தயாரிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்த நிலையிலும் இற்றைவரை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மருத்துவ கல்வி சம்பந்தமாக தீர்க்கமானதொரு உரையாடல் நாட்டில் உருவாகி இருக்கும் இத்தருணத்தில் பல வருடங்கள் தாமதாகியிருக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-29

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks