01

E   |   සි   |  

 திகதி: 2017-10-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1869/2017: நிதிக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு: பதவியணி

1869/ '17

கௌரவ நாமல் ராஜபக்ஷ,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.02.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிதிக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் (F.C.I.D) சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த பதவியணி யாதென்பதையும்;

(ii) அதிலுள்ள பதவிநிலை தரத்திற்கான பதவிகள் யாவையென்பதையும்;

(iii) அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள், முகவரிகள், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிகமாக செலுத்தப்படும் விசேட கொடுப்பனவுகள் உள்ளிட்ட மொத்த சம்பளத்தை தனித்தனியாகக் கொண்ட ஆவணமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015.02.26 ஆம் திகதி தொடக்கம் இற்றைவரை விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்கச் செய்யப்பட்ட மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, அவர்கள் விஜயங்களை மேற்கொண்ட வெளிநாடுகளின் எண்ணிக்கை, வெளிநாடுகள் மற்றும் அவ்விஜயங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) அதற்காக பங்கேற்ற உத்தியோகத்தர்களின் பெயர்கள், முகவரி, விஜயம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாடு மற்றும் மேற்படி விஜயங்களுக்காக செலவிடப்பட்ட பணத்தொகை தனித்தனியாக உள்ளடங்கிய ஆவணமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-03

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)       පිළිතුරු ලබාදිය නොහැක.

              (ii)       පිළිතුරු ලබාදිය නොහැක.

              (iii)       පිළිතුරු ලබාදිය නොහැක.

(ආ)          (i)       පිළිතුරු ලබාදිය නොහැක.

              (ii)       පිළිතුරු ලබාදිය නොහැක.

(ඈ)       පිළිතුරු ලබාදිය නොහැක.

 

பதில் தேதி

2017-10-09

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks