01

E   |   සි   |  

 திகதி: 2017-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1757/2017: Lanka Salt Limited issues

1757/ '17

கௌரவ வாசுதேச நாணாயக்கார,— அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வ/ப லங்கா சோல்ட் கம்பனியின் பங்குகளில் 90% ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு (ETF) சொந்தமாகின்றதென்பதையும்; இலங்கையின் மொத்த உப்புச் சந்தையில் 60% க்கு அதிகமான தொகையை இக்கம்பனி கொண்டுள்ளதென்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கம்பனியில் இருந்த 500 இற்கமைய மற்றும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 1000 ஐ கடந்துள்ளதெனினும், உப்பு உற்பத்தியில் தௌிவானதொரு அதிகரிப்பை காணமுடியவில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) கம்பனியில் பண்டங்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யவதற்கோ அல்லது உப்பு விற்பனைக்கோ திட்டவட்டமான கொள்கையொன்று இல்லாமையினாலும் ஊழல் மற்றும் மோசடி காரணமாகவும் தற்போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) அத்தியாவசிய உணவுப் பண்டமாகிய உப்பின் விலை இவ்வாறு தாங்கிக்கொள்ள இயலாத அளவிற்கு உயர்வடைவதை நிறுத்தி, நியாயமான விலைக்கு உப்பினை வழங்குவதற்கும் ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-17

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks