E   |   සි   |  

 திகதி: 2017-05-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1707/2017: Sudden Stoppage of SMIL 111 Loan Plan

 

கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டும் பொருட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் மற்றும் நுண்பாக கைத்தொழில்களுக்கு சலுகை வட்டியின் அடிப்படையில் இரண்டு வருடகால சலுகைக் காலத்துடன் SMILE III கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதென்பதையும்;

(ii) கருத்திட்ட பணிப்பாளரினால் 2016 யூலை மாதம் 10 ஆம் திகதி பத்திரிகைகளில் அறிவித்தல்கள் வௌியிடப்பட்டு, கடன் வழங்குதல் சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்பட்டதென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் கடன் வழங்குவதற்கு 10 வர்த்தக வங்கிகள் முன்வந்ததுடன், கடனை எதிர்பார்த்து 5000 கடன் விண்ணப்பதாரிகள் முன்வந்த போதிலும் கடன் வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

(iv) பல தொழில்முயற்சியாளர்களினால் தேவையான அடிப்படை செலவுகள் மேற்கொள்ளப்பட்டு பிணை உறுதிகளை கைச்சாத்திடல், ஈட்டுறுதிகளை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ள போதிலும் கடன் வழங்கப்படவில்லை என்பதையும்;

(v) இந்த நிலைமையின் காரணமாக புதிய தொழில்முயற்சிகள் மற்றும் மேம்படுத்தப்படும் தொழில்முயற்சிகள் இடைநடுவே தடைப்பட்டுள்ளதுடன், இது தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கமாக அமைந்துள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) கடன் தொகையை வழங்குவதற்கு ஆற்றல் இல்லையெனில், 2016.07.10 ஆம் திகதிய பத்திரிகைளில் அறிவித்தல்களை வௌியிட்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-25

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks