01

E   |   සි   |  

 திகதி: 2017-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1699/2017: Deeds for persons who occupied the state lands for more than 10 years

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மகாவலி காணிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு உரிமை உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீா்மானமொன்றை மேற்கொண்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;

(ii) ஆமெனின், மேலே குறிப்பிட்ட கொள்கையை அமுலாக்குவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) 2015.01.08 ஆம் திகதிக்குப் பின்னர் உரிமை உறுதிகள் பெற்றுக்கொடுக்கப் பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(iv) தற்சமயம் உரிமை உறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக இனம் காணப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(v) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்ட காணித் துண்டுகளில் அரசாங்கத்தினால் வரைபடம் தயாரிக்கப்பபட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(vi) தேசிய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான மேலே கூறப்பட்ட கருத்திட்டத்தின் அமுலாக்கம் வெகுவாக தாமதப்படுத்தப் பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(vii) ஆமெனின், மேற்படி வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks