E   |   සි   |  

 திகதி: 2017-07-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

1597/2017: Taxila College, Horana - unfair cash donations for admission of children to grade 1

 

கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாட்டின் பிரபல்யமான பாடசாலைகளுக்கு குறிப்பாக, தேசிய பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக கடும் போட்டி நிலவுகின்றதென்பதையும்;

(ii) இதன் காரணமாக சிரமங்களுக்கு உள்ளாகின்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அந்த பாடசாலைக்கு சேர்ப்பதற்காக கல்வி அமைச்சிடமும் விடயங்களை முன்வைக்கின்றனரென்பதையும்;

(iii) பெற்றோர்கள் குழுவொன்றின் அத்தகைய வேண்டுகோளினை பரிசீலனை செய்த கல்வியமைச்சினால் ஹொரண தக்சிலா மத்திய வித்தியாலயத்தின் பல்வேறு தரங்களுக்காக சேர்த்துக்கொள்ளும் பொருட்டு மாணவர்களின் பெயர்ப்பட்டியலொன்று பாடசாலை அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) மேற்படி பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட பெயர்களில், முன்னுரிமை வழங்குவதற்காக வித்தியாலயத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஐந்து இலட்சம் ரூபா பணம் எதிர்பார்க்கப்படுவதாக ஒருசில பெற்றோர்களுக்கு பழைய மாணவர்களின் பிரதிநிதிகளாக உள்ள ஒருசில ஆட்களால் அறிவிக்கப்பட்டுள்ளதென்தையும்;

அவர் அறிவாரா?

(ஆ) குறிப்பாக வறிய பிள்ளைகளின் எதிர்கால மேம்பாட்டுக்காக இலவசக் கல்வியின் தந்தையால் நிர்மாணித்து ஆரம்பிக்கப்பட்ட மத்திய வித்தியாலயங்களிலிருந்து இவ்விதமாக பணத்தை பின்தொடர்ந்து செல்கின்ற நிலைமை உருவாகின்றமை பாரதூரமான தவறாகவும் அதேபோன்று பாரதூரமான அநீதியாகவும் அமைகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா?

(இ) இது சம்பந்தமாக பொறுப்புக்கூறவேண்டிய ஆட்களுக்கு எதிராக செயலாற்ற நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-28

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks