01

E   |   සි   |  

 திகதி: 2018-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1424/2018: Proposals 201- Budget 2016

1424/ '16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 201 இன் மூலமாக புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி போன்ற விசேடமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பாரியளவில் சுற்றாடல் கூருணர்வுமிக்க கைத்தொழில்கள் தாபிக்கப்படுமென செய்யப்பட்டுள்ள முன்மொழிவுக்கிணங்க 2016 ஆம் ஆண்டில் அப்பிரதேசங்களில் புதிதாக தாபிக்கப்பட்ட கைத்தொழில்கள் யாவை;

(ii) சுற்றாடல் கூருணர்வுமிக்க கைத்தொழில்களை இனங்காண்பதற்காக பாவிக்கப்படுகின்ற குறிகாட்டிகள் யாவை;

(iii) இலங்கையில் ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களினுள்ளும் அதற்கு வௌியிலும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ள சுற்றாடல் கூருணர்வுமிக்க கைத்தொழில்கள் யாவை;

(iv) மேற்படி கைத்தொழில்கள் மூலமாக சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதகமான தாக்கங்களைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் விதந்துரைக்கப்பட்டுள்ள வழிமுறைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-04

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks