01

E   |   සි   |  

 திகதி: 2017-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

1230/2017: Archaeological places in Kilinochchi district - allocated funds 2015/2016, Destroyed by LTTE

1230/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்ரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிமிக்க இடங்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி இடங்களில் தற்போது பேணல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற இடங்கள் யாவை;

(iii) இதற்காக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;

(iv) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிமிக்க இடங்கள் யாவை;

(v) மேற்படி அழிவுகள் பற்றிய மதிப்பீடொன்று செய்யப்பட்டிருப்பின், மதிப்பீட்டுப் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவு;

(vi) மேற்படி அழிவுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

(vii) மேற்படி அனைத்தினதும் முழுமையானதோர் அறிக்கையை சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-28

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks