01

E   |   සි   |  

 திகதி: 2016-09-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0788/2016: Delimitation of Divisional Secretariats - Trincomalee District

788/ '16

கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன,— உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், 11 பிரதேச செயலாளர் பிரிவுகளின், நிருவாக நடவடிக்கைகள் இதுவரை பழைய எல்லைகளின்படி நடைபெற்றுவந்ததுடன், 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க அதிகாரத்தைக் கையளிக்கும் சட்டம் மற்றும் 1996.08.02 ஆம் திகதிய 935 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையின்படி புதிய எல்லைகள் அடையாளமிடப்பட்டு வருகின்றதென்பதையும்;

(ii) இதன் மூலம், பதவி ஸ்ரீபுர பிரிவில், 31J சிங்ஹபுர, 31F பழைய மதவாச்சி மற்றும் 31M சமன்புர ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதையும்;

(iii) கோமரங்கடவல பிரிவில், 233C மயிலவெவ கிராம அலுவலர் பிரிவின் ஒரு பகுதியும், சேருவில பிரிவின் ஒரு சில பகுதிகளும் வேறு பிரிவுகளுக்குப் பிரிந்து செல்கின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பழைய நிருவாகப் பிரிவுகளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த கிராம அலுவலர் பிரிவுகளும் கிராமங்களும் யாவை;

(ii) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட சட்டத்தின் படி எல்லைகளை மீள அடையாளமிடுகையில் வேறு பிரிவுகளுக்குரித்தாயிருந்த கிராம அலுவலர் பிரிவுகள் / கிராமங்கள் யாவை;

(iii) தற்போது செயற்படும் எல்லை நிர்ணய குழுவின் தீர்மானத்தின்படி புதிதாக பிரிவு எல்லைகள் அடையாளமிடப்படுமா;

(iv) ஆமெனில், அதன் அடிப்படை யாது;

(v) இது தொடர்பில் ஒவ்வொரு பிரிவிலும் குடியிருப்போரினது இணக்கம் வினவப்படுமா;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-08

கேட்டவர்

கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks