01

E   |   සි   |  

 திகதி: 2016-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0632/2016: Bhikkus jailed and imprisoned 1948-2015

632/ '16

கௌரவ ஜயந்த சமரவீர,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 1948 ஆம் ஆண்டு முதல் 2015 சனவரி மாதம் 08 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மற்றும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்த பிக்குமார்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது;

(ii) விளக்கமறியலில் வைக்கப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிக்குமார்கள், அவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு அல்லது சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணமான குற்றச்சாட்டு அல்லது குற்றம், ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) விளக்க மறியலில் வைக்கப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிக்குமார்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதி ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) (i) 2015.01.08 ஆந் திகதி முதல் 2016.03.31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்குமார்களின் எண்ணிக்கை யாது;

(ii) விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்குமார்களுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) மேற்படி பிக்குமார்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதி ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-23

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks