01

E   |   සි   |  

 திகதி: 2016-06-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0462/2016: Social Development Officers - Tamil speakers needed

462/ ’16 ​கௌரவ ஈ. சரவணபவன்,— தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கடந்த அரசாங்கத்தின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் சமுதாய அபிவிருத்தி உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இன விகிதாசார, மொழி விகிதாசார மற்றும் பிரதேச ரீதியாக முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதையும்; (ii) மேற்படி அமைச்சானது சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இயங்காமையின் காரணமாக அங்கே வெற்றிடங்கள் உருவாகியுள்ளதென்பதையும்; (iii) மேலே (i) இல் குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ளாமல் அகில இலங்கை ரீதியாக 205 வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் விண்ணப்பதாரர்கள் முறையே 189, 15 மற்றும் 01 என்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்ப்பு காரணமாக முன்னாள் சனாதிபதி அவர்கள் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாரென்பதையும்; (iv) எவ்வாறாயினும், (i) இன் விடயங்களை கவனத்திற்கொள்ளாது மேலே (iii) இன் பிரகாரம் சமுதாய அபிவிருத்தி உதவியாளர் பதவிகளுக்கு மேற்படி பிரிவினர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும்; (ii) மேலே (i) இன் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க நல்லாட்சியினுள் உங்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்; (iii) ஆமெனில், மேற்படி குறைபப்பாட்டை நிவர்த்தி செய்ய எவ்வாறு நடவடிக்கை எடுப்பார் என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-10

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks