01

E   |   සි   |  

 திகதி: 2016-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0407/2016: Middeniya Fair, Weerakatiya

407/ ’16

கெளரவ நாமல் ராஜபக்ஷ,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     வீரகெட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரிவில் பஸ்மன் சந்தி மித்தெனிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள வீரகெட்டிய பிரதேச சபைக்குரிய சந்தை ஒரு வருட காலமாக சந்தைக்குரிய நிலப்பரப்புக்கு வெளியே தற்காலிகமாக பேணிவரப்படுவதன் காரணமாக வர்த்தக சமூகத்தினரும் நுகர்வோரும் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும்;

(ii) மேற்படி சந்தையை புதிதாக நிர்மாணிக்கும் பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) குறிப்பிட்ட திட்டத்துக்கமைய சந்தையை நிர்மாணிப்பதற்கான சகல பணிகளும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த கட்டிடங்களையும் காணியையும் வீரகெட்டிய பிரதேச சபைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-03-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks