01

E   |   සි   |  

 திகதி: 2014-10-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

4975/2014: Grama Niladhari Sectors

4975/ ’14

கெளரவ (திருமதி) அனோமா கமகே,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இலங்கையில் ஒவ்வொரு மாவட்டதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ)    (i)      தற்போது சேவையிலீடுபட்டுள்ள கிராம அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) தற்போது நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்கள் எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) இறுதியாக கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்காக பரீட்சை நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;

(v) மேற்படி பரீட்சை பெறுபேறுகளின்படி ஆட்சேர்க்கப்பட்ட கிராம அலுவலர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கிராம அலுவலர் ஒருவர் தனது பிரிவில் ஆற்றும் கடமைகள் யாவை என்பதையும்;

(ii) பொது நிருவாக விடயத்துக்குப் புறம்பாக கிராம அலுவலர்களினால் நிறைவேற்றப்படும் கடமைகள் மேற்பார்வை செய்யப்படும் முறை யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-30

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-10-30

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks